Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மரத்தில் ஏறிய ஆடவர் மின்சாரம் தாக்கி மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மரத்தில் ஏறிய ஆடவர் மின்சாரம் தாக்கி மரணம்

பாப்பார், 08-

சபா, பாபார் பகுதியில் உள்ள கம்போங் பம்பாஙானிஒ மாம்பழம் பறிக்க மரத்தின் மீது ஏறிய ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 42 வயதான அஹாஜா அப்துல் மூசா என்ற அந்த நபர், மரக்கிளையில் மாம்பழம் பறிக்க இரும்பு கம்பத்தைப் பயன்படுத்தியபோது, அது அருகிலுள்ள மின் கம்பியில் பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று பிற்பகல் 3:01 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்த நபர் மரத்தின் மீது மயங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பாப்பார் தீயணைப்பு - மீட்பு நிலையத் தலைவர் ரொஸ்லான் ஒஸ்மான் தெரிவித்தார். சபா மின்சார வாரியம் மின்சார விநியோகத்தைத் துண்டித்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் அவரை கீழே இறக்கினர். ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →