May 21, 2026
Thisaigal NewsYouTube
புத்திசாலித்தனமாகத் தொழுவத்தைத் திறந்து தப்பியோடிய மாடு!
தற்போதைய செய்திகள்

புத்திசாலித்தனமாகத் தொழுவத்தைத் திறந்து தப்பியோடிய மாடு!

Share:

தனது தலையையும் உடலையும் பயன்படுத்திப் பண்ணையின் கனமான இரும்பு வாயிலைத் தள்ளித் திறந்த, மாடு ஒன்று சாதுரியமாகத் தப்பியோடிய சம்பவம் இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழுவத்திற்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த மாடு, தனியாகத் தப்பித்தது மட்டுமன்றி, அருகில் இருந்த மற்றொரு தொழுவத்தின் கதவையும் திறந்துவிட்டு மற்ற விலங்குகளையும் விடுவித்து ஒரு முழுமையான 'பண்ணை சிறையுடைப்பை' நடத்தியுள்ளது.

இதனால் நொடிப்பொழுதில் பண்ணையே கட்டுப்பாட்டை இழந்து, விலங்குகள் அனைத்தும் தீவனம் இருக்கும் இடத்தை நோக்கிச் சுதந்திரமாக ஓடத் தொடங்கின. இந்த மாட்டின் புத்திசாலித்தனமான மற்றும் திட்டமிட்ட நகர்வுகளைக் கண்டு வியந்த நெட்டிசன்கள், இது ஏதோ பிற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான வீரத்தீரச் செயல் அல்ல, தீவன வாளியை வேகமாகச் சென்றடைவதற்காக நடத்தப்பட்ட "பலகாரப் புரட்சி" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related News