பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், தனது ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடியும் வரை முழுமையாக நீடிக்கும் என்று கூட்டணி கட்சிகள் உறுதி அளித்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் மாநாட்டில் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், அரசியல் நிலைத்தன்மைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டால் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார். ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்ததே பிரதமரின் இந்த அதிரடி கருத்துக்குக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாரிசான் நேஷனல், ஜி.ஆர்.எஸ் மற்றும் ஜி.பி.எஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகள் அன்வார் இப்ராஹிமின் ஆட்சிக்கு இறுதிவரை முழு ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக மறுஉறுதி அளித்துள்ளன.
இதன் மூலம் முன்கூட்டியே தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டு, தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.








