Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் - 4 பள்ளி மாணவர்கள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் - 4 பள்ளி மாணவர்கள் படுகாயம்

Share:

கிளாந்தான் மாநிலத்தின் மாச்சாங் பகுதியில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், ஆசிரியர் ஒருவர் ஓட்டி வந்த காருடன் மோதி விபத்திற்குள்ளானதில் அவர்கள் நால்வரும் படுகாயமடைந்தனர்.

7 முதல் 14 வயதுக்குட்பட்ட அச்சிறுவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை, 14 வயது சிறுவன் ஓட்டியதாக நம்பப்படுகின்றது.

ஜாலான் கோட்டா பாரு-குவாலா கிராய் சாலையில்,எஸ்.எம்.கே ஸ்ரீ இந்தான் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளானது, திடீரென வலதுபுறமாக திரும்பி சந்திப்பிற்க்குள் நுழைய முயன்றதாக நம்பப்படுகிறது.

இதனால், தன் பாதையில் சரியாக பயணித்துக் கொண்டிருந்த காரின் முன்புற வலதுபக்கத்தில் மோதி, இவ்விபத்து நிகழ்ந்ததாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் அஜுஹார் நூர் தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு