May 21, 2026
Thisaigal NewsYouTube
பங்சார் துப்பாக்கிச் சூடு: லாரி ஓட்டுநர் மீது கொலை முயற்சி வழக்கு
தற்போதைய செய்திகள்

பங்சார் துப்பாக்கிச் சூடு: லாரி ஓட்டுநர் மீது கொலை முயற்சி வழக்கு

Share:

கடந்த மாதம் கோலாலம்பூர், பங்சார் கேளிக்கை விடுதிக்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாக 27 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஏ. லெகேஸ்வரன் என்ற அந்த லோரி ஓட்டுநர், 41 வயது தொழிலதிபர் பி. யோக சுந்தரம் என்பவரை நோக்கிச் சுட்டதாக குற்றங்சாட்டப்பட்டார். எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யோக சுந்தரம், தற்போது மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட லேகேஸ்வரன் தலைமறைவாக வாய்ப்புள்ளதாலும், சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்பதாலும் அவருக்குப் பிணை வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜே. பானுஷா எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மசுலியானா அப்துல் ரஷீத், பிணை வழங்க மறுத்ததுடன் இந்த வழக்கை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News