May 21, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழையினால் திடீர் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழையினால் திடீர் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் இன்று நண்பகல் முதல் பெய்த கனமழையினால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின.

அம்பாங், மேரு, செத்தியா ஆலாம் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களின் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சிலாங்கூர், ஜோகூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மழை பெய்யவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, வாகனமோட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News