Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மேத்தாவைச் சாடினார் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேத்தாவைச் சாடினார் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல்

கோலாலம்பூர், ஜூன்.03-

சமூக வலைத்தளங்களில் சைபர் பகடி வதை, மோசடி, ஆபத்தான உள்ளடக்கங்கள் தொடர்பிலான விவகாரத்தைக் கையாளுவதில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து மிகப் பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களான மேத்தா மற்றும் எக்ஸ் ஆகியவற்றைத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் இன்று சாடினார்.

டிக் டாக் மட்டுமே உண்மையிலேயே தனது பங்களிப்பையும், ஈடுபாட்டையும் வழங்கி வருகிறது என்பதுடன் தொடர்பு மற்றும் பல்லூடக உள்ளடக்கங்கள் மீதான ஆய்வரங்கிலும் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்றுள்ளது என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

எனினும் சமூக வலைத்தளங்களில் தற்கொலை போன்ற அபாயகர உள்ளடக்க விவகாரங்களை அவற்றின் போக்குகளிலேயே அப்படியே விட்டு விட முடியாது, கைக்கழுவி விடவும் முடியாது. உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற தற்கொலை உள்ளடக்கங்கள் மீதான தொடர்த்துறை மற்றும் பல்லூடக ஆய்வரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் டத்தோ பாஃமி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை