Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் விதிமீறல்: 19 மாணவர்களுடன் ஆபத்தான முறையில் சென்ற வேன் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கூலிமில் விதிமீறல்: 19 மாணவர்களுடன் ஆபத்தான முறையில் சென்ற வேன் பறிமுதல்

Share:

கூலிம் பெர்டானா நெடுஞ்சாலையில் முறையான அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றை போக்குவரத்து இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனையின்போது, 12 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த வேனில், 19 மாணவர்கள் மிகவும் நெருக்கடியான மற்றும் ஆபத்தான நிலையில் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அந்த வாகனத்தின் சாலை வரி காலாவதியாகி இருந்ததோடு, காப்புறுதியும் இல்லை என்பது உறுதியானது.

இது குறித்துப் பேசிய கெடா மாநில போக்குவரத்து இலாகா தலைமை அதிகாரி ஸ்டீன் வான் லூதம், "வாகனத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" என்றார். இது தொடர்பாக 42 வயது பெண் ஓட்டுநருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விவகாரம் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்