Oct 10, 2026
Thisaigal NewsYouTube

யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கை நிறுத்தி வைக்கக் கோரிய பிரதமர் அன்வாரின் விண்ணப்பம் தள்ளுபடி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கை நிறுத்தி வைக்கக் கோரிய பிரதமர் அன்வாரின் விண்ணப்பம் தள்ளுபடி

கோலாலம்பூர், ஜூன்.04-

தனக்கு எதிராக யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான சிவில் வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்து கொண்ட விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தனக்கு எதிராக அன்வார் பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் கூறி, அவருக்கு எதிராக யூசோஃப் ரவுத்தர் இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.

பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு, சிவில் வழக்குகளில் இருந்து, சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? இது போன்ற வழக்குகளிலிருந்து தனிப்பட்ட விலக்கு அளிக்கப்படுகிறதா? என்பது தொடர்பான 8 சட்டப்பூர்வ கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விடை காணும் வரையில், தனக்கு எதிராக யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள இந்த சிவில் வழக்கு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று தனது விண்ணப்பத்தில் அன்வார் கேட்டுக்கொண்டு இருந்தார்.

எனினும் அன்வார், கூட்டரசு நீதிமன்றத்தில் முன்வைக்கவிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்புடைய 8 கேள்விகளுக்கு தேவையான தகுதிப்பாட்டை, அவர் பூர்த்தி செய்யவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அன்வாரின் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது மூலம் யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த சிவில் வழக்கு விசாரணை, திட்டமிட்டப்படி வரும் ஜுன் 16 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்குச் செலவுத் தொகையாக யூசோஃப் ரவுத்தருக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குமாறு அன்வாருக்கு அவர் ஆணைப் பிறப்பித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை