Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ: சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ: சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்

Share:

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 934 சிறந்த SPM மாணவர்கள், தங்களின் கல்விச் சாதனையைப் பாராட்டி வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையைப் பெற்றனர். மனிதவள அமைச்சும் எச்ஆர்டி கோர்ப் அமைப்பும் இணைந்து இந்த உன்னத முயற்சியை முன்னெடுத்துள்ளன.

மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , 4A முதல் அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கூறுகையில் , "மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் எச்ஆர்டி கோர்ப் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவு பாராட்டுக்குரியது. நாட்டின் மனித மூலதனத்தை வலுப்படுத்தவும், மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் ஆண்டுதோறும் தொடர்வதை நான் உறுதி செய்வேன்," எனத் தெரிவித்தார்.

சுங்கை பூலோ சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையினால் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஊக்கத் தொகை குறித்து திசைகளிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமது ஷமீர் அப்துல் அஜீஸ் பேசுகையில், இந்த ஊக்கத்தொகை வெறும் நிதி உதவி மட்டுமல்ல, மாணவர்களின் கடின உழைப்பிற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்றார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி மக்களின் உள்ளூர் பயணத் தேவைகளை எளிதாக்கும் வகையில், 10,000 இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும் என்பதையும் டத்தோஸ்ரீ ரமணன் தமது ஊரையில் தெரிவித்தார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

சுங்கை பூலோ: சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - டத்தோஸ... | Thisaigal News