Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பணக்காரர்களுக்கான பெட்ரோல் மானியம் நீக்கப்படுமா ? அரசாங்கம் பரிசீலனையில் உள்ளது - பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
தற்போதைய செய்திகள்

பணக்காரர்களுக்கான பெட்ரோல் மானியம் நீக்கப்படுமா ? அரசாங்கம் பரிசீலனையில் உள்ளது - பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

Share:

கோலாலம்பூர், மே.10-

மலேசியாவில் அதிக வருமானம் ஈட்டும் பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெட்ரோல் மானியத்தைத் திரும்பப் பெறுவது குறித்து அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில், குறிப்பாக T15 , T20 பிரிவினரை இலக்காகக் கொண்டு இந்த மானியக் குறைப்பு நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான பரிந்துரை அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது அதன் இறுதிக் கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மலாயா பல்கலைக்கழக இந்திய மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இந்த மாற்றத்தினால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருப்பதாகவும், தகுதியானவர்களுக்கே மானியம் சென்றடைவதை உறுதிச் செய்யப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பணக்காரர்களுக்கு வழங்கப்படும் இந்த மானியத்தை நிறுத்தி, அதன் மூலம் மிஞ்சும் நிதியை ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். உலகளாவிய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் நிதி நிலையைப் பலப்படுத்தவும் இத்தகைய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டம் மிகவும் அவசியம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்