Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மேல்முறையீட்டு வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேல்முறையீட்டு வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார் அன்வார்

கோலாலம்பூர், ஜூன்.05-

தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ரவுத்தரின் சிவில் வழக்கு தொடர்பான எட்டுக் கேள்விகளுக்கு விளக்கம் கோரியிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிரகாரித்ததைத் தொடர்ந்து அவர் மேல்முறையீட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் அப்பீல் நீதிமன்ற பதிவு அலுவலகத்தில் தமது வழக்கறிஞர் நிறுவனமான தேதுவான் ஸையின், மேகா அண்ட் மூராட் மூலமாக அன்வார் தனது மேல்முறையீட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

78 வயதான அன்வார் சார்பில் அவரின் முதன்மை வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. ராஜசேகரன் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தாார்.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் அளித்த தீர்ப்பின் உள்ளடக்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார், அத்தீர்ப்பின் முடிவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார் என்று ராஜசேகரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை