Oct 10, 2026
Thisaigal NewsYouTube

8 பல்கலைக்கழக மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
8 பல்கலைக்கழக மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

கோலத் திரங்கானு, ஜூன்.05-

கடந்த ஆண்டு திரெங்கானு மலேசிய பல்கலைக்கழகத்தில் சக மாணவனைத் தாக்கி, கடும் காயங்களை விளைவித்ததாக அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் கோலத் திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

21 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பல்லைக்கழக மாணவர்களும் மாஜிஸ்திரேட் இஃப்ஃபா நமிஹா இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 21 வயது மாணவன் கடும் காயங்களுக்கு ஆளானான்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எட்டு மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை