Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மகனை ஜாமீனில் எடுக்க தந்தை மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மகனை ஜாமீனில் எடுக்க தந்தை மறுப்பு

பத்து பாஹாட், ஜூன்.09-

அண்மையில் அறிமுகமான 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தனது 16 வயது மகனை, தந்தை ஒருவர் 1,500 ரிங்கிட் செலுத்தி, ஜாமீனில் எடுக்க மறுத்து விட்டார்.

இது எனது மகனுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடும் ஒரு மகனை காப்பாற்ற எந்த தந்தையும் முற்படக்கூடாது என்று 40 வயது தந்தை தெரிவித்தார்.

அந்த 16 வயது பையன், ஜோகூர், பத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி அருள் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுன் 2 ஆம் தேததி பிற்பகல் 4 மணியளவில் பத்து பாஹாட்டில் உள்ள ஒரு வீட்டில் தனக்கு அறிமுகமான பெண்ணை அந்தப் பையன் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்தப் பையன் ஒப்புக் கொண்டான். தீர்ப்பு கூறுவதற்கு ஏதுவாக, அந்தப் பையனை 1,500 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம்அனுமதித்தது. எனினும் தனது மகனை ஜாமீனில் எடுக்க விரும்பவில்லை என்று அந்த தந்தை உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →