Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பழைய கார் எண்களுக்கு அடித்தது ஜாக்பாட் : சிலாங்கூர் ஆடவர் 14.8 மில்லியன் வென்றார்
தற்போதைய செய்திகள்

பழைய கார் எண்களுக்கு அடித்தது ஜாக்பாட் : சிலாங்கூர் ஆடவர் 14.8 மில்லியன் வென்றார்

Share:

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 52 வயது ஆடவர் ஒருவர், தனது பழைய கார் பதிவு எண்களை பயன்படுத்தி ஸ்போர்ட்ஸ் டோட்டோ மலேசியா நடத்திய டோட்டோ 4டி ஜாக்பாட் 1 -இல் 14.8 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.

சொத்து மேலாளராக பணியாற்றி வரும் அந்நபர், 9186 மற்றும் 4828 என்ற எண்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பந்தயம் கட்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 6-ஆம் தேதி அவர் 6 ரிங்கிட் மதிப்பில் சிஸ்டம் 3-ல் பந்தயம் கட்டிய நிலையில், அதே குலுக்கலில் இரண்டு எண்களும் வெற்றி பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்த எண்கள், தனது பழைய கார்களையும், அதனுடன் கூடிய நினைவுகளையும் நினைவூட்டுவதால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரே குலுக்கலில் இரண்டு எண்களும் வெற்றி பெறும் என்று தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு