கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சரக்கு கிடங்கில் எட்டு பெட்டிகளில் 15 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள மின்னியல் மென்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு நபர்களும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதிக்கும் 29 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுங்கை பேலேக், கே.எல்.ஐ.ஏ, நீலாய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் அந்த அறுவரும் பிடிபட்டனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிப் பெட்டி, கைப்பேசி போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய அந்த மின்னியல் மென்பொருட்கள் தைவானுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


