கப்பலில் ஏற்பட்ட மோதலில் சீன நாட்டு நபர் ஒருவர் தனது சக ஊழியரால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாங்கூர் கடல் பகுதியில், தஞ்சோங் ரூ கடற்கரையிலிருந்து சுமார் நான்கு கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு கப்பலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் 47 வயதான அந்த நபர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்துள்ள நிலையில், மருத்துவ உதவிக்காக நேற்று இரவு 8.52 மணியளவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற அதிகாரிகள், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காகத் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 36 வயதான மற்றொரு சீன நாட்டு நபர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்படவுள்ளதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.









