கெடா, ஜித்ரா பண்டார் டாருல் அமான் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘Ops Sapu’ அதிரடி சோதனையில் 44 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 10.50 மணியளவில், 12 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்தச் சோதனையில், மொத்தம் 47 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 39 வங்காளதேசத்தினர், 4 இந்தோனேசியர்கள் மற்றும் ஒரு இந்திய பிரஜை என மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமை மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக பெலாந்திக் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.





















