தாய்லாந்தின் ஹாட்யாய் பகுதியில் போக்குவரத்து போலீசார் போட்ட டயர் பூட்டைச் சேதப்படுத்திய மலேசிய ஆடவர் ஒருவருக்கு 3,000 பாட் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இடத்தில் காரை நிறுத்தியதற்காகப் போடப்பட்ட பூட்டை, அந்த 40 வயது ஆடவர் காரைப் பின்னோக்கி இயக்கி உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் ஜாலான் பிராச்சாதிபத் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் போலீஸ் நிலையத்தில் முன்னிலையானார்.
அவசரத்தில் பூட்டை கவனிக்கவில்லை என்று அந்த மலேசியர் கூறிய போதிலும், அவர் டயரைச் சோதனையிடும் காட்சிகள் ஆதாரமாக உள்ளதால் அவரது விளக்கம் ஏற்கப்படவில்லை.








