Jul 6, 2026
Thisaigal NewsYouTube
வெட்டுக் கத்தியை ஏந்திய நிலையில் ஆவேசமாக நடந்து கொண்ட பெண் கைது
தற்போதைய செய்திகள்

வெட்டுக் கத்தியை ஏந்திய நிலையில் ஆவேசமாக நடந்து கொண்ட பெண் கைது

Share:

தாவாவ், ஜூன்.02-

காரில் வந்த பெண்மணி ஒருவர், கையில் வெட்டுக் கத்தியை ஏந்திக் கொண்டு, பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்திய நிலையில், அவரைப் போலீசார் லாவகமாகப் பிடித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, சபா, தாவாவ் நகரில் மாலை 5 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எனினும் அந்தப் பெண்ணின் ஆக்ரோஷமானச் செயல், பலரை பயமுறுத்தியது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 39 வயதுடைய அந்தப் பெண்ணை பேச்சு கொடுத்தவாறு பிடித்தனர் என்று தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜஸ்மீன் ஹுசேன் தெரிவித்தார்.

அந்தப் பெண் பயன்படுத்திய வெட்டுக் கத்தியைப் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரின் காரைச் சோதனையிட்டதில் கோடாரி மற்றும் இதர கூர்மையான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், அவரின் உண்மையான நோக்கம் குறித்து தற்போது புலன் விசாரணை செய்து வருவதாக ஏசிபி ஜஸ்மீன் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்