ஜோகூர் மாநிலம், ஸ்கூடாய் , தாமன் இண்டஸ்ட்ரி ஜெயா பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்த வழக்கில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 26 முதல் 29 வயதுக்குட்பட்ட இரு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்ணிடம், எந்த ஒரு ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவில்லை என ஜோகூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த 27 வயது ஆடவர், சிங்கப்பூரிலுள்ள கிடங்கொன்றில் பணியாற்றி வந்ததாகவும், இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு 27 வயது ஆடவர் அவரது நண்பர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக இஸ்கந்தர் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமாரசன் தெரிவித்திருந்தார்.
துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததையும், மற்றொருவர் காயமடைந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.








