Oct 10, 2026
Thisaigal NewsYouTube

53 வயது காப்புறுதி முகவரான பெண் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
53 வயது காப்புறுதி முகவரான பெண் கைது

மலாக்கா, ஜூன்.02-

கடந்த மார்ச் மாதம் ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்டதுடன், அந்த ஆசிரியையை மிரட்டி வந்ததாக நம்பப்படும் 53 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதுடைய அந்த ஆசிரியை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து காப்புறுதி முகவரான அந்த பெண் நேற்றிரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலாக்கா, கிளேபாங்கைச் சேர்ந்த அந்த ஆசிரியையின் தந்தை ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளார். அந்தக் கடிதத்தில் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் தனது மகள் மற்றும் மருமகனின் நிர்வாணக் கோலப் புகைப்படம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் அந்த ஆசிரியைக்கு அந்தப் பெண் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்ததாக நம்பப்படுகிறது.

நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான அந்த மாது, இன்று காலையில் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, இரண்டு நாள் தடுப்புக் காவல் அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை