Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு விளையாட்டுத்துறையில் தலைமைத்துவ விருது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு விளையாட்டுத்துறையில் தலைமைத்துவ விருது

Share:

ஜோகூர் மாநிலத்தின் பட்டத்து இளவரசர் மற்றும் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்க்கு, 2026-ஆம் ஆண்டிற்கான “விளையாட்டுத் தலைமைத்துவ சின்னம் விருது” என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கமானது இவ்விருதை அவருக்கு வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள விருது விழாவில் வழங்கவுள்ளது.

ஜோகூரின் விளையாட்டுத் துறையை, தொழில்முறை மற்றும் சர்வதேசத் தரத்தில் மாற்றியமைப்பதில் இளவரசர் வெளிப்படுத்திய தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தைப் பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜொகூர் தாருல் தாஜிம் (JDT) அணியின் உரிமையாளரான துங்கு இஸ்மாயில், தொடர்ச்சியான உள்நாட்டு ஆதிக்கம் மற்றும் ஆசிய அளவிலான சாதனைகள் மூலம் அந்த அணியை மலேசியாவின் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க விளையாட்டு மன்றமாக மாற்றியுள்ளார் என்றும் அச்சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு விளையாட்டுத்துறையில் ... | Thisaigal News