Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சர்வதேச அருங்காட்சியக தினம்: மே 18-ல் 19 அருங்காட்சியகங்களில் இலவச நுழைவு
தற்போதைய செய்திகள்

சர்வதேச அருங்காட்சியக தினம்: மே 18-ல் 19 அருங்காட்சியகங்களில் இலவச நுழைவு

Share:

சர்வதேச அருங்காட்சியக தினம் 2026-ஐ முன்னிட்டு, மலேசிய அருங்காட்சியகத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து 19 அருங்காட்சியகங்களிலும், வரும் மே 18 ஆம் தேதி மலேசியர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முயற்சி குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அருங்காட்சியகங்களைப் பார்வையிடும் பழக்கத்தை ஊக்குவித்து, நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகும் என தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ தகாங் தெரிவித்துள்ளார்.

இன்று தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற மத்திய மண்டல ஒற்றுமை வாரம் 2026 விழாவில் பேசிய அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், தேசிய ஒற்றுமை அமைச்சு, மலேசிய அருங்காட்சியகத் துறை மற்றும் ஜோகூர் பாரம்பரிய அறக்கட்டளையுடன் இணைந்து, சர்வதேச அருங்காட்சியக தினம் 2026 கொண்டாட்டத்தை, வரும் ஜூன் 23 முதல் 30 வரை ஜோகூரில் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்