Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இந்தோனேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தோனேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

கிள்ளான், ஜூன்.08-

கிள்ளான், ஜாலான் சுங்கை ஜாத்தியில் சட்டத்திற்குப் ஐஸ் லாரியை ஓட்டிச் சென்ற இந்தோனேசியர் ஒருவரைச் சாலை போக்குவரத்துத் துறை ஜேபிஜே அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அந்த லாரி ஓட்டுநரிடம் முறையான உரிமம், வணிக ஓட்டுநர் உரிமம் இல்லை, சாலை வரி செலுத்தப்படவில்லை, காப்பீடு இல்லை, புஸ்பாகோம் தணிக்கை காலாவதியாகிவிட்டது, லாரியின் முன்புறம் வாகனப் பதிவு எண் இல்லை என ஜேபிஜேவின் சிலாங்கூர் மாநில இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கடந்த மூன்று மாதங்களாகவே லாரியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், லாரி பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஜேபிஜே ஷா ஆலாம் அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →