Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இடைக்காலத் தடை உத்தரவு கோரும் டத்தோஸ்ரீ அன்வாரின் விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை அப்பீல் நீதிமன்றத்தில் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இடைக்காலத் தடை உத்தரவு கோரும் டத்தோஸ்ரீ அன்வாரின் விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை அப்பீல் நீதிமன்றத்தில் விசாரணை

கோலாலம்பூர், ஜூன்.06-

தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கின் விசாரணையை நிறுத்தி வைப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவு கோரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழக்கு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை செவிமடுக்கவிருக்கிறது.

அன்வாரின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. ராஜசேகரன், இன்று பிற்பகலில் அப்பீல் நீதிமன்ற துணைப் பதிவதிகாரி முன்னிலையில் வழக்கு தொடர்பான சாரம்சத்தை விளக்கியதைத் தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு கோரும் அன்வாரின் விண்ணப்பத்தை செவிமடுப்பதற்கு வரும் செவ்வாய்க்கிழமை, விசாரணை நாளாக நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

யூசோப் ரவுத்தர் தனக்கு எதிராகத் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கைச் செவிமடுப்பதற்கு முன்னதாக கூட்டரசு நீதிமன்றத்தில் தாம் முன்வைக்கவிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான 8 கேள்விகளுக்கு விடைக் காணும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்ததைத் தொடர்ந்து அன்வார், வழக்கை நிறுத்தி வைக்க இந்த இடைக்கால தடை உத்தரவைக் கோருகிறார்.

யூசோப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கு மீதான விசாரணை, வரும் ஜுன் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாகவே வழக்கை நிறுத்தி வைக்கக் கோரும், இடைக்கால தடை உத்தரவு கேட்டு அன்வார், அப்பீல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை