Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேருந்து கவிழ்ந்ததில் 33 அந்நிய நாட்டவர்கள் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேருந்து கவிழ்ந்ததில் 33 அந்நிய நாட்டவர்கள் காயம்

பாங்கி, ஜூன்.05-

தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில் 33 அந்நிய நாட்டவர்கள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6.50 மணியளவில் பண்டார் பாரு பாங்கி, செக்‌ஷென் 13, ஜாலான் P/6 என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பாக காலை 6.59 மணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பாங்கி மற்றம் காஜாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்த 13 வீரர்கள், கவிழ்ந்து கிடந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காயமுற்றவர்களில் எண்மர் காஜாங் மற்றும் செர்டாங் ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் எஞ்சியவர்கள், சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் அம்புலன்ஸ் பணியாளர்களால் அவசர சிகிச்சை பெற்றனர் என்று அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் 11 பேர் எவ்வித காயத்திற்கும் ஆளாகவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை