Sep 26, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் 5 மாதக் குழந்தை பலி - லோரி ஓட்டுநர் போதையில் இருந்ததாக போலீசார் சந்தேகம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் 5 மாதக் குழந்தை பலி - லோரி ஓட்டுநர் போதையில் இருந்ததாக போலீசார் சந்தேகம்

Share:

கெடா மாநிலம் பாலிங்-இல் நேற்று அதிகாலை கார் மற்றும் லோரி மோதிய விபத்தில் ஐந்து மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில், லோரியை ஓட்டியவர் போதைப்பொருள் தாக்கத்தில் இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று அதிகாலை 12.20 மணியளவில் பாலிங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை உயிரிழந்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து ஜாலான் பாரு கூலிம் சாலையில் உள்ள கம்பங் சாதேக் சந்திப்புக்கு அருகே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது, 27 வயதான ஆடவர் தமது 41 வயது மனைவி மற்றும் குழந்தையுடன் கெரிக்லிருந்து கூப்பாங் நோக்கி காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லோரியுடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News