May 21, 2026
Thisaigal NewsYouTube
தெரேசா கோக்கின் முன்னாள் உதவியாளர் மீதான ஊழல் வழக்கு: இரண்டு மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
தற்போதைய செய்திகள்

தெரேசா கோக்கின் முன்னாள் உதவியாளர் மீதான ஊழல் வழக்கு: இரண்டு மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

Share:

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்கின் முன்னாள் உதவியாளர் மீது, பள்ளிகளுக்கு விவேகத் திரை எனப்படும் ஸ்மார்ட் போர்டுகள் கொள்முதல் செய்த வழக்கில், இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இன்று திங்கள்கிழமை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில், 40 வயதுடைய எட்மண்ட் தியோ கெங் யிக்வுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது, தாம் குற்றமற்றவர் என மறுத்து விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிகையின் படி, செபுத்தே தொகுதியில் விவேகத் திரை கொள்முதலுக்காக 16 பள்ளிகள் விண்ணப்பித்திருந்ததை அறிந்திருந்தும் கூட, 2 பள்ளிகள் மட்டுமே விண்ணப்பித்திருந்ததாக, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்-ஐ எட்மண்ட் தியோ நம்ப வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புராஜெக்ட் மெஸ்ரா ரக்யாட் திட்டத்தின் கீழ், இந்த விண்ணப்பங்களுக்கு தெரேசா கோக்-ஐ ஒப்புதல் அளிக்க வைத்ததாகவும் எட்மண்ட் தியோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 417-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News