Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வாகனத்துடன் பேருந்து மோதல்: உப்சி பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் உட்பட 15 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாகனத்துடன் பேருந்து மோதல்: உப்சி பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் உட்பட 15 பேர் பலி

கெரிக், ஜூன்.09-

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழமான தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ், உப்சி உயர்க்கல்விக் கூடத்தின் பேருந்து விபத்துக்குள்ளானதில், அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள், பேருந்து ஓட்டுனர் என 15 பேர் உயிரிழந்தனர்.

இத்துயரச் சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் கிழக்கு, மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக், பனுன் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

அல்ஸா, எம்பிவி வாகனத்துடன் மோதி, அந்த பேருந்து கவிழ்ந்ததில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 14 மாணவர்களும், பேருந்தைச் செலுத்திய அதன் ஓட்டுநரும் உயிரிழந்ததாக உலு பேராக், பொது தற்காப்புப் படை மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த பேருந்தில் உயிரிழந்த 14 மாணவர்கள் உட்பட 48 பேர் பயணித்தாகக் கூறப்படுகிறது.

அந்த பல்கலைக்கழக பேருந்து, திரெங்கானு, ஜெர்தேவிலிருந்து தங்சோங் மாலிமை நோக்கி வந்து கொண்டு இருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →