அடுத்து வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் கூட்டணி, மாநிலத்தின் அனைத்து 56 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என அம்மாநில பாரிசான் நேஷனல் தலைவர் ஒன் ஹாபிஸ் காசி அறிவித்துள்ளார்.
மக்களின் கருத்துகள் மற்றும் மாநில அம்னோ, பாரிசானைச் சேர்ந்த அடிமட்ட தலைவர்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும், அர்ப்பணிப்புடன் செயல்படும் வலுவான, நிலையான அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதையே இந்த முடிவு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தானாகவே கலைக்கப்படும் நிலையில், அதன் பிறகு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.








