Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பெண் வாகனமோட்டியைக் கைத்துப்பாக்கிக் கட்டையால் அடித்த டத்தோஸ்ரீ கைது
தற்போதைய செய்திகள்

பெண் வாகனமோட்டியைக் கைத்துப்பாக்கிக் கட்டையால் அடித்த டத்தோஸ்ரீ கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.05-

மூன்று தினங்களுக்கு முன்பு, ஜார்ஜ்டவுன், ஜாலான் கெலாவேய் சாலையில் பெண் வாகனமோட்டியைக் கைத்துப்பாக்கிக் கட்டையினால் அடித்து கடும் காயத்தை விளைவித்ததாக நம்பப்படும் டத்தோஸ்ரீ அந்தஸ்தை கொண்ட பிரமுகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளர்.

காயமுற்ற பெண் வாகனமோட்டி அளித்த புகாரைத் தொடர்ந்து, 41 வயதுடைய அந்த டத்தோஸ்ரீ நேற்று காலை 9.30 மணியவில் பினாங்கு, திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதுடைய பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில், அந்த டத்தோஸ்ரீ கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரொஸாக் முகமட் தெரிவித்தார்.

தத்தம் வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்பட்ட தகராற்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்