Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மேன்மை தங்கிய பேராக் சுல்தான் அனுதாபம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேன்மை தங்கிய பேராக் சுல்தான் அனுதாபம்

ஈப்போ, ஜூன்.09-

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் விபத்தில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கும் சுல்தான் நஷ்ரின் ஷா, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பேராக் அரசியார் துவாங்கு ஸாரா சலிமும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

15 பேரின் உடல்களும் கிடத்தி வைக்கப்பட்டுள்ள ஈப்போ, ராஜா பெர்மைசூரி தெங்கு பைனுன் மருத்துவமனைக்கு வருகை புரிந்த சுல்தான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →