May 21, 2026
Thisaigal NewsYouTube
AI , பருவநிலை மாற்ற சவால்கள்: வலிமையான ஊடகங்களின் அவசியம்!
தற்போதைய செய்திகள்

AI , பருவநிலை மாற்ற சவால்கள்: வலிமையான ஊடகங்களின் அவசியம்!

Share:

சுபாங் ஜெயா, மே.10-

பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி போன்ற நவீன கால சவால்களை மலேசியா வெற்றிகரமாக எதிர்கொள்ள, சுதந்திரமான, வலிமையான ஊடகங்கள் மிகவும் அவசியம் என மலேசிய ஊடக மன்றத்தின் துணைத் தலைவர் Premesh Chandran வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கேள்வி கேட்டு சமூகத்தின் நலனை உறுதிச் செய்வதில் ஊடகவியலாளர்களின் பங்கு முன்பை விட தற்போது மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

தகவல் சுதந்திரத்தையும் மக்களாட்சியையும் காப்பதன் மூலம் மட்டுமே, தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் இயற்கை பேரிடர்களுக்கும் மத்தியில் ஒரு விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்று சுபாங் ஜெயாவில் நடைபெற்ற Festival Solidariti Media 2026 ஊடக விழாவில் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News