Oct 10, 2026
Thisaigal NewsYouTube

15 மாணவர்கள் பலி கொண்ட கோர விபத்து : பேருந்து ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
15 மாணவர்கள் பலி கொண்ட கோர விபத்து : பேருந்து ஓட்டுநருக்குத் தடுப்புக் காவல்

ஈப்போ, ஜூன்.10-

தஞ்சோங் மாலிம் கல்வியியல் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்து தொடர்பில் அந்த பேருந்து ஓட்டுநர், தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த பேருந்து ஓட்டுநர், மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும், விசாரணைக்கு ஏதுவாக அவருக்கு எதிராகத் தடுப்புக் காவல் அனுமதி நீதிமன்றத்தில் பெறப்படும் என்று நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அந்த பேருந்து ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →