Jul 6, 2026
Thisaigal NewsYouTube
6 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் மாது
தற்போதைய செய்திகள்

6 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் மாது

Share:

ஈப்போ, ஜூன்.09-

பொய்யான முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 57 வயது மாது, தனது வாழ்நாள் சேமிப்புப் பணமான 6 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வெளியிடப்பட்ட, குறுகிய காலத்தில் கொழுத்தப் பணம் என்ற விளம்பரத்தை நம்பி, அந்த மாது 6 லட்சம் ரிங்கிட்டைக் கட்டம் கட்டமாக முதலீடு செய்துள்ளார்.

முதலில் 14 ஆயிரம் ரிங்கிட்டை அவர் முதலீடு செய்துள்ளார். அதற்கு லாப ஈவாக ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், அவரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

பின்னர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிக்கும் ஜுன் 4 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத் வங்கியின் 28 பண பரிமாற்றம் மூலம் 6 லட்சம் ரிங்கிட்டை அந்த மாது முதலீடாக செலுத்தியுள்ளார்.

லாப ஈவு கிடைக்கும் என்று நம்பியிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த 6 லட்சம் ரிங்கிட்டும் திரும்பக் கிடைக்கவில்லை. தாம், மோசம் போனது குறித்து அந்த மாது போலீசில் புகார் செய்து இருப்பதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்