Jul 6, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தான் உடல் நிலை தேறினார்
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தான் உடல் நிலை தேறினார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது, ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா, உடல் நலம் தேறியுள்ளார்.

புருணை சுல்தானை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தனர்.

புருணை சுல்தானின் உடல் நலம் தேறியுள்ளதால், அவர் ஐஜேஎன்னை விட்டு நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புருணை சுல்தான் தற்போது நலமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகின் நீண்ட கால ஆட்சியாளர் என்று வர்ணிக்கப்படும் 78 வயது புருணை சுல்தான் அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார். உடல் அசதி காரணமாக அவர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், அவர் ஐஜேஎன்னில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்