Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இரு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படாமல் பட்டினிப் போட்டு கொடுமை: தாயாரும் அவரின் காதலனும் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படாமல் பட்டினிப் போட்டு கொடுமை: தாயாரும் அவரின் காதலனும் கைது

சுபாங் ஜெயா, ஜூன்.06-

தனது இரு பெண் பிள்ளைகளுக்கு உணவு எதுவும் தரப்படாமல், அவர்களைப் பட்டினிப் போட்டுக் கொடுமைப்படுத்தி வந்ததாக நம்பப்படும் அந்தப் பிள்ளைகளின் தாயாரையும், காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சுபாங் ஜெயா, பூச்சோங்கில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக நல இலாகாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இருவரும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

37 வயது மாதுவும், அவரின் 42 வயது காதலனும் ஒரே வீட்டில் தங்கியிருந்த வேளையில் தங்களுடன் தங்கியிருந்த 4 மற்றும் 16 வயதுடைய இரு பெண் பிள்ளைகளுக்கு உணவு எதுவும் தரப்படாமல் அவ்விருவரையும் வாட்டி வதைத்து வந்ததாக நம்பப்படுகிறது.

அவ்விருவரிடம் நடத்தப்பட்ட சோனையில் அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் பழைய 8 குற்றப்பதிவுகளை அவர் கொண்டு இருப்பதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை