Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைத் திட்ட ஊழல்: டான்ஸ்ரீயின் 143 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரச் சொத்துக்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைத் திட்ட ஊழல்: டான்ஸ்ரீயின் 143 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரச் சொத்துக்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், கடந்த வாரம் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகர் ஒருவரின் 143 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ஆடம்பரச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

மொத்தம் 4.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14 தனிப்பட்ட வங்கிக் கணக்குகள், மொத்தம் 33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிறுவனத்தின் 8 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஒரு சொகுசு கொண்டோமினியம், 24.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு நிலம், 7.65 மில்லியன் மதிப்புள்ள 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

அந்த டான்ஸ்ரீக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்