May 21, 2026
Thisaigal NewsYouTube
 கேமரன் மலை ஆலயத்தில் ஆடவரை வாளால் காயப்படுத்தியவர் கைது
தற்போதைய செய்திகள்

கேமரன் மலை ஆலயத்தில் ஆடவரை வாளால் காயப்படுத்தியவர் கைது

Share:

கேமரன் மலை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், வாளால் ஒருவரை காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 6 மணியளவில் போலீசாருக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ராம்லி தெரிவித்துள்ளார்.

31 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பர்களுடன் ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News