பல கிளினிக்குகளுக்குச் சொந்தக்காரரான காஜாங்கைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 41 வயதுடைய அந்த வர்த்தகர் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் நண்பர் செய்துள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட வர்த்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் அந்த வர்த்தகர் கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று டத்தோ ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட வர்த்தகர் கேபள் கம்பினால் கழுத்து நெரிக்கப்பட்டு, சடலத்தைப் பயணப் பெட்டியில் மறைத்து, உலு லங்காட்டில் ஒரு காட்டுப்பகுதியில் மலை உச்சியிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டுள்ளதாக அந்த குத்தகையாளர் வாக்குமூலம் அளித்துள்ளளார்.
அந்த வர்த்தகருக்கு சொந்தமான பெரோடுவா அக்சியா கார் உட்பட ஐந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்தக் குத்தகையாளர், பிணைப்பணம் கேட்டு, மிரட்டுவதற்காக அந்த வர்த்தகரைக் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்துள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


