Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மாடியிலிருந்து குதித்தார்

சுங்கை பட்டாணி, ஜூன்.09-

கெடா சுங்கை பட்டாணியிலுள்ள தாமான் செஜாத்தியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோல மூடா மாவட்டத்தின் தலைமை காவல் துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார் .

நேற்று மாலை 5.00 மணி அளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 30 வயது மதிக்கத்தக்க தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள், அந்நிய நாட்டு ஆடவர்களுடன் இந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது என்று ஏசிபி ஹன்யான் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்களைக் கைது செய்த அதே சமயத்தில் மூன்று வங்காளதேச ஆடவர்களையும் அதிகாரிகள் கைது செய்திருப்பாக அவர் குறிப்பிட்டார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டதற்கு தாய்லாந்துப் பெண்கள் தலா 150 ரிங்கிட் கட்டணமாக வாடிக்கையாளர்களுக்கு விதித்து இருக்கின்றனர் என்று ஏசிபி ஹன்யான் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →