May 21, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் மாயமான மீனவரின் உடல் பாகங்கள் மீட்பு- முதலைத் தாக்கியிருக்கலாம் என அச்சம்
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் மாயமான மீனவரின் உடல் பாகங்கள் மீட்பு- முதலைத் தாக்கியிருக்கலாம் என அச்சம்

Share:

சரவாக் மாநிலம் மருடியில் நேற்று மாயமானதாகத் தேடப்பட்ட வந்த மீனவரின், உடல் பாகங்கள் இன்று மீட்கப்பட்டன.

அவர் சுங்கை ரிடான் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முதலை தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

64 வயதான லியூ மெய் கூன் என்ற அந்நபரின் கால்கள், தலை மற்றும் ஒரு கை ஆகிய பாகங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சுங்கை ரிடான் பாலத்தின் கீழ் லியூவின் மோட்டார் சைக்கிள், ஆடைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கிடந்ததை அடுத்து, அவரது தம்பி லியூ காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News