Jun 6, 2026
Thisaigal NewsYouTube
இந்திய மாணவர்களின் கல்வி ஒளியேற்றப் பிரதமர் வருகை: மித்ராவின் மடிக்கணினி மற்றும் நிதி உதவி வழங்கும் விழா
தற்போதைய செய்திகள்

இந்திய மாணவர்களின் கல்வி ஒளியேற்றப் பிரதமர் வருகை: மித்ராவின் மடிக்கணினி மற்றும் நிதி உதவி வழங்கும் விழா

Share:

மலேசியாவில் உள்ள உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா எனப்படும் இந்திய சமூகப் பொருளாதார உருமாற்றுப் பிரிவு சிறப்பானதொரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, தகுதியுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் மாபெரும் நிகழ்வு நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் துங்கு வேந்தர் மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் அவர்களின் அயராத முயற்சியில் உருவான இந்நிழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை தந்து மாணவர்களுக்கு இந்த உதவிகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

தங்களின் கல்விச் செலவினச் சுமையை பெருமளவில் குறைத்துள்ளதாகப் பயன் அடைந்த மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இத்தகைய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தங்களின் உயர்க்கல்விப் பயணத்தைத் தடையின்றித் தொடர பெரும் ஊக்கமளிப்பதாக அவர்கள் திசைகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

மித்ராவின் கணினி வழங்கும் இந்த திட்டம் தங்களின் கல்விச் செலவினச் சுமையை பெருமளவில் குறைத்துள்ளதாகப் பயன் அடைந்த மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இத்தகைய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தங்களின் உயர்க்கல்விப் பயணத்தைத் தடையின்றித் தொடர பெரும் ஊக்கமளிப்பதாக 'திசைகளிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்."

இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம், வசதிகுறைந்த நிலையில் உள்ள இந்திய மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு