Jun 12, 2026
Thisaigal NewsYouTube
காப்பார் பள்ளியில் 12 வயது மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

காப்பார் பள்ளியில் 12 வயது மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

Share:

கிள்ளான், காப்பார் பகுதியில் உள்ள பள்ளியொன்றில், நேற்று 6-ஆம் ஆண்டு மாணவர் ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயதுடைய அம்மாணவர், நேற்று காலை சுமார் 8.30 மணியளவில், பள்ளி கூட்டத்தின் போது, திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், உடனடியாக அவர் சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்துள்ளார்.

எனினும், அம்மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சவப்பரிசோதனையில் எந்தவித குற்றச் செயல்களும் கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவமானது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

காப்பார் பள்ளியில் 12 வயது மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந... | Thisaigal News