Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலமில் கேபிள் திருட்டு கும்பல் முறியடிப்பு - 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஷா ஆலமில் கேபிள் திருட்டு கும்பல் முறியடிப்பு - 6 பேர் கைது

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கேபிள் திருட்டு கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இது தொடர்பாக, கடந்த மே 4-ஆம் தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்‌ஷன் 2 பகுதியில் டெலிகாம் மலேசியா கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வு பிரிவு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஷா ஆலம் போலீஸ் தலைவர் ராம்சே எம்போல் தெரிவித்தார்.

மேலும், மே 4 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை, ஆறு நாட்கள் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது, 26 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அவர்கள் அனைவருக்கும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஏழு முதல் 31 வழக்குகள் வரை முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்ததுள்ளதாக ராம்சே எம்போல் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்