Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் வெட்டிக்கொலை: மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆடவர் வெட்டிக்கொலை: மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

ஆடவர் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பேர் மீது தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட நபர் தனது நட்பு வட்டத்தை சந்திப்பதற்காக தனது நண்பருடன் சென்றபோது, முகமூடி அணிந்த நபர்கள் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியதில், அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தங்காக், சுங்கை மாத்தியில் உள்ள புக்கிட் காங்கார் பகுதியில் நிகழ்ந்தது. 38 வயது தோங் வீ ஷெங் என்பவரின் மரணத்திற்கு காரணமாகக் கருதப்படும் மூவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் ஒருவர் குண்டர் கும்பல் ஒன்றில் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், வழக்கு விசாரணை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்