May 21, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் - மலேசியா இடையிலான நல்லுறவு பேணிக் காக்கப்பட வேண்டும் - மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் - மலேசியா இடையிலான நல்லுறவு பேணிக் காக்கப்பட வேண்டும் - மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வலியுறுத்து

Share:

சிங்கப்பூரும், மலேசியாவும் வேறு வேறு நாடுகளாக இருந்தாலும் கூட, இரண்டுமே அண்டை நாடுகள் என்பதால், நம்மிடையே உள்ள வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.

பகாங் மற்றும் திராங்கானு மாநிலங்களில் மேற்கொண்ட ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் எப்போதும் நல்ல ஒத்துழைப்புடன் செயல்படும் நண்பர்களாக இருக்க வேண்டும். வேறுபாடுகள் காரணமாக எழும் பிரச்சினைகள், உறவுகளை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையிலான உயர் மட்ட நல்லுறவு, மாநில அளவிலான ஒத்துழைப்பாலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய தீபகற்பத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பகாங் மற்றும் திரங்காணு மாநிலங்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால், அவற்றுடன் நெருங்கிய தொடர்பை பேணுவது அவசியம் என்றும் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

Related News