Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஹாக்ஸ்பில் கடல் ஆமை
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஹாக்ஸ்பில் கடல் ஆமை

Share:

ஹாக்ஸ்பில் இனத்தைச் சேர்ந்த அரிய வகை கடல் ஆமை ஒன்று மலாக்கா மாநிலம் பெங்காலான் பாலக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், இறந்த நிலையில் கிடந்த அந்த ஆமையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

ஹாக்ஸ்பில் வகை ஆமையானது உலகளவில் மிகவும் அபாய நிலையில் உள்ள அரிய கடல் ஆமை இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பவளப்பாறை சூழலின் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த இனத்தின் எண்ணிக்கை, மீன்பிடி வலைகள், கடல் மாசுபாடு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதனிடையே இறந்த ஆமையானது, ஆண் இனத்தைச் சேர்ந்தது என்றும், அதன் ஓட்டின் நீளம் 80 செ.மீ. மற்றும் அகலம் 72 செ.மீ. இருப்பதன் அடிப்படையில் சுமார் 10 முதல் 15 வயதுக்குள் இருக்கலாம் என்றும் மலாக்கா மாநில மீன்வளத்துறை இயக்குநர் சௌஃபி அஃபான்டி தாலிப் தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

மலாக்காவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஹாக்ஸ்பி... | Thisaigal News