மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் போன்ற நெருக்கடி காலங்களில், ஆசியான் நாடுகள் தங்களுக்குள் விரைவாக உணவு விநியோகத்தை உறுதி செய்ய 'பிராந்திய தயார்நிலை நடைமுறை' ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ், CEBU – வில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 48-வது ஆசியான் உச்சிமாநாட்டில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார், எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுப்பதாக எச்சரித்தார்.
அரிசி கையிருப்பு மட்டுமின்றி, உரப் பாதுகாப்பிலும் ஆசியான் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பெட்ரோலியப் பாதுகாப்பு உடன்படிக்கையை விரைவுபடுத்த வேண்டும். மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் ஆசியான் கமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை வெறும் துறை சார்ந்த விஷயமாகப் பார்க்காமல், பிராந்தியத்தின் மிக முக்கிய போர்முறை முன்னுரிமையாகக் கருத வேண்டும் போன்ற பரிந்துரைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்மொழிந்தார்.








